
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி. தற்போது பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
பல வருடங்கள் கழித்து, கேம் ஓவர் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடித்தார். தற்போது மீண்டும் ஒரு தமிழ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது. இதில் பிரதான கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்து வருகிறார். இந்த கதையில் டாப்ஸி நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று ஒரு வருடமாக அவருக்காக காத்திருந்துள்ளார் தீபக் சுந்தர்ராஜன். முழுக்க, முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது. விஜய்சேதுபதியும் படபிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர் மற்ற நடிகர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.