தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்கும் மோகம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டாம் பாகமாக வெளியாகும் இந்த படங்கள் முந்தைய பாகம் தந்த வெற்றியை ஓரளவிற்குதான் தருகிறது.

Advertisment

vjs

சமீபத்தில் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து முதல்வன் 2 உருவாக வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த படங்களின் வரிசையில் சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா செட்டி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும். குறும்பட இயக்குநராக இருந்த நலன் குமாரசாமியின் முதல் படம் இது. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியையே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.