விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற மே 16ஆம் தேதி ‘சிந்துபாத்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

vijay sethupathi shruthi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இச்செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

விஜய் சேதுபதியும், அவரது நண்பர் ஆறுமுகமும் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர். சிங்கம்-3 படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகிறார் ஷ்ருதி ஹாசன். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

எஸ்.பி. ஜனநாதன் கடைசியாக பொறம்போக்கு என்னும் படத்தை ஆர்யா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ‘லாபம்- பகல் கொள்ளை’ என்று தலைப்பு வைத்துள்ளதாக விஜய் சேதுபதி ட்விட்டரில் அறிவித்திருந்தார். வழக்கமாக எஸ்.பி. ஜனநாதன் பாமர மக்களுக்கும் உலகத்தின் பின்னணி அரசியலை எடுத்து சொல்வதில் கெட்டிக்காரர். இந்த படமும் அதுபோன்ற கதைகளத்தை கொண்டதாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.