பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பையோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கான பையோபிக்களும் எடுத்து வரப்படுகிறது. தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பையோபிக்கள் நீண்டு கொண்டே இருக்கிறது.

vj sethupathi

Advertisment

Advertisment

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும். அதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 800 விக்கெட் எடுத்து பெரிய சாதனை படைத்துள்ளார். அதனால் இப்படத்திற்கு ‘800’ என தலைப்பிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.