விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத் தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இதில் சில படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மேலும் இதையடுத்து முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் விஜய் சேதுபதி.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதுமட்டுமல்லாமல் துக்ளக் தர்பார் என்கிறபடத்திலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இப்படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. 96 புகழ் கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை நேற்று படக்குழு அறிவித்து வந்தது. நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தில் பார்த்திபன் நடிக்கிறார் என்றும், விஜய் சேதுபதிக்கு ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரியும் நடிப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.