vjs new

விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருகிறார், அதில் ஒரு படம்தான் ‘துக்ளக் தர்பார்’.

Advertisment

புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்க, ஆர். பார்த்திபன், அதிதிராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை செவன் ஸ்கிரீன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் வியாகாம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். விஜய் சேதுபதியின் '96' படத்தைத் தொடர்ந்து கோவிந்த் வசந்தாதான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் ஷூட்டிங் மீதமுள்ள நிலையில் 'துக்ளக் தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இரண்டு முன்னணி இயக்குனர் இயக்கும் இரண்டு வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.