Advertisment

இசைக்கலைஞராக நடிக்கும் விஜய் சேதுபதி !

vj

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கின்றார். பேரான்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக உருவாகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசுகிறது. விஜய்சேதுபதி இப்படத்தில் இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மூனாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe