style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் சேதுபதி - சீனுராமசாமி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் முதல்முறையாக இணைந்து இசையமைக்கும் இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.