bdsgsd

Advertisment

ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'அந்தாதூன்' மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இப்படம் 3 தேசிய விருதுகளை தட்டிச் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இப்படம் தமிழில் பிரஷாந்த், சிம்ரன் நடிப்பில் ரீமேக் ஆகிறது. மேலும் தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இந்நிலையில் 'அந்தாதூன்' இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் தன் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக கத்ரீனா கைப்பும், முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாகத் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி ஹிந்தியில் 'காந்தி டாக்கீஸ்' என்ற மவுன படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் அவர் 'மாநகரம்' ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.