விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 25ஆம் தேதி ‘தலைவன் தலைவி’ படம் வெளியானது. பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழைத் தாண்டி ‘சார் மேடம்’ என்ற தலைப்பில் தெலுங்கிலும் நாளை(01.08.2025) வெளியாகிறது. இதையொட்டி புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறார்கள். இப்படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்போது தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். 

அண்மையில் எக்ஸ் வலைதளத்தில் ரம்யா மோகன் என்ற பெயர் கொண்ட ஐ.டி.யில் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார் முன் வைக்கப்பட்டது. அந்த பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு தெரிந்த ஒரு பெண்ணை விஜய் சேதுபதி பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து பணம் பெற்றுக் கொண்டு சமூக ஊடகங்களில் துறவி போல் நடந்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் பதிவிட்ட சில மணிநேரங்களில் அந்த பதிவு நீக்கப்பட்டது. பின்பு சம்பந்தப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காக இந்த பதிவுகளை நீக்குவதாக அப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்த ஐ.டி- டீ-ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.  

200

இந்த நிலையில் விஜய் சேதுபதி எக்ஸ் பயணி கூறிய குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள் கூட இந்த குற்றச்சாட்டை பார்த்தால் சிரிப்பார்கள். எனக்கும் என்னைப் பற்றி தெரியும். இந்த மாதிரியான மோசமான குற்றச்சாட்டு என்னை வருத்தமடையச் செய்யாது. ஆனால் என் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுகிறார்கள். அவர்களிடம், இதை கண்டுகொள்ளாதீர்கள், அந்த பெண் ஒரு கவன ஈர்ப்புக்காக செய்கிறார். இதன் மூலம் கொஞ்சம் புகழை பெற்றுள்ளார். பெற்றுக் கொள்ளட்டும் என சொல்லிவிட்டேன்.

Advertisment

இது குறித்து சைபர் கிரைமில் புகாரளித்துள்ளோம். ஏழு ஆண்டுகளாக இது போன்று எல்லா வகையான சர்ச்சைகளையும் நான் எதிர்கொண்டு வருகிறேன். இது போன்ற குறிவைக்கப்பட்ட செயல்கள் என்னை ஒரு போதும் பாதிக்காது. இனிமேலும் அப்படித்தான்” என்றார்.