Advertisment

"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை" - விஜய்சேதுபதி விளக்கம்!

dsgsdgb

விஜய் சேதுபதி நடிப்பில், அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

இதில் 'ராசிமான்' என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. டீசரில்அந்தப் பெயர் பொறித்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை இக்காட்சியில் கிண்டல் செய்திருப்பதாக கருதி, நாம் தமிழர் கட்சி சார்பில் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

Advertisment

"இனி படம் எடுக்கும்பொழுது கதையை வெளியே கூறிவிட்டுத்தான் எடுக்க வேண்டும் போலிருக்கிறது. படம் வந்தால்தானே தெரியும், கதை என்னவென்று. நாங்கள் என்ன, பிரச்சனையில் ஈடுபட வேண்டும் என்றா படம் எடுக்கிறோம். நாங்கள் மக்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுக்கிறோம். அந்த மாதிரி சர்ச்சையைக் கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை. அதற்கு அவசியமும் இல்லை" எனக் கூறியுள்ளார்.

Tughlaq Durbar Vijay Sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe