
விஜய் சேதுபதி தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கத்தில் புது படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதனிடையே நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50வது படமான ‘மகாராஜா’ படத்தில் நடித்துள்ளார். தமிழை தாண்டி, இந்தியில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் 2024ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இதனிடையே விஜய் சேதுபதி ஆறுமுக குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வந்தார். இப்படம் அவரது 51வது படமாக உருவாகி வருகிறது. கதாநாயகியாக திவ்யா பிள்ளை நடிக்கும் நிலையில் யோகி பாபு, பப்ளூ பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. பின்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
That’s a wrap on #VJS51 🎥✨
Title & First Look Soon 💥@7CsPvtPte @Aaru_Dir @justin_tunes @rukminitweets @iYogiBabu #BablooPrithiveeraj #KaranBRawat #Avinashbs @R_Govindaraj @rajNKPK @DivyaPillaioffl @Denes_Astro @yogeshdir @proyuvraaj @sathishoffl @decoffl pic.twitter.com/R23rNRzGkI— VijaySethupathi (@VijaySethuOffl) November 30, 2023