Advertisment

50வது படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளுடன் விஜய்சேதுபதி !

vijay sethupathi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விஜய் சேதுபதி நடிப்பில் 'செக்கச் சிவந்த வானம்' வரும் 27ஆம் தேதியும், த்ரிஷாவுடன் நடித்த '96' படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதியும் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சை ரா நரசிம்ம ரெட்டி, பேட்ட என அடுத்தடுத்து நடித்துக்கொண்டு பிசி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் பெரிய இயக்குனர்கள் படங்களுக்கே பெரும்பாலும் கால்ஷீட் கொடுத்துவரும் விஜய் சேதுபதி இடை இடையே அறிமுக இயக்குனர் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி வித்யாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார். மேலும் இது விஜய் சேதுபதிக்கு 50வது படம் ஆகும். மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Advertisment

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe