/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/43_26.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார். கதாநாயகன் பாத்திரம் மட்டுமல்லாது வில்லன், துணை கதாபாத்திரம் என நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள நான்கு படங்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளன.
மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தீபக் சுந்தராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'அனபெல் சேதுபதி' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி விவசாயி' திரைப்படமும் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. ஒரே மாதத்தில் நான்கு படங்கள் வெளியாகவுள்ளது விஜய் சேதுபதியின் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)