vijay selfie in goat movie

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (The Greatest of All Time) என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை இரவில் படமாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்தது. பின்பு கடந்த புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி வைரலானது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய்யை காண ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களை பார்த்து விஜய் கையசைக்கும் வீடியோ ஒன்றுசமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைட்ன் தொடர்ந்து தற்போது விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் விஜய் இளமை தோற்றத்தில் இருக்கிறார். படத்தில் அவர் இரு வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே போல் மாஸ்டர் பட, படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் அவர் எடுத்த செல்ஃபி வைரலானது நினைவுகூரத்தக்கது.