'ஒரு குட்டி கதை' பாடலை பாடியவர் விஜய்! 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் சென்னை, டெல்லி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் செய்யப்பட்டு தற்போது நெய்வேலி சுரங்கத்தில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.

vijay ani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நேற்று இரவும் விஜய்யை பார்க்க திரளான மக்கள் கூட்டம் கூடியது. அதனால் பேருந்தின் மேல் ஏறி மக்களுக்கு கையசைத்து நன்றி செலுத்தினார் விஜய். இந்நிலையில் ஷூட்டிங் விரைவில் முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் இறுதி கட்ட பணிகளை படக்குழு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

day night

இந்நிலையில் ஃபிப்ரவரி 14ஆம் தேதி, ‘ஒரு குட்டி கத’ என்றொரு பாடலை வெளியிடப்போவதாக நேற்று படக்குழு அறிவித்தது. . இன்று காலை சமூக வலைத்தளத்தில் ஒரு குட்டி கதை பாடலை யார் பாடியிருப்பார்கள் என்பதைகெஸ்செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தனர்.தற்போது மாஸ்டர் படத்திலிருந்து வெளியாகப்போகும் முதல் சிங்கிள் பாடலை விஜய்தான் பாடியிருக்கிறார் என்ற தகவலை தெரிவித்துள்ளது படக்குழு.

கத்தி படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது.

actor vijay master
இதையும் படியுங்கள்
Subscribe