கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 144 ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

gdge

Advertisment

மேலும் கரோனாவால் திரையுலகமே முடங்கியுள்ளதால் நடிகர் நடிகையரும் வீட்டுக்குள்ளேயே இருந்து வரும் நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஃபிலிம் மேக்கிங் படித்து வருகிறார். கரோனா ஊரடங்கால் அவர் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எப்போது நாடு திரும்புவார் என விஜய்யின் குடும்பம் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே நடிகர் விஜய் தன் மகனைக் காணாமல் மிகுந்த கவலையில் இருப்பதாக ஒருபுறம் தகவல்கள் கசிந்து வருகிறது. ஆனால் விஜய் தரப்பிலோ இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment