Advertisment

ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

master vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து ரிலீஸுக்காக காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படம் முதலில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

தேசிய ஊரடங்கில் பல தளர்வுகளை அரசு மேற்கொண்டாலும் தியேட்டர்களை தற்போது திறக்க திட்டமில்லை என்பதை முன்பே தெரிவித்துவிட்டது. தற்போது அரசு தெரிவித்த நிபந்தனைகளுடன் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை லோகேஷ் மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில் இந்த மாத 22ஆம் தேதி நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். வருடா வருடம் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட முறையில் கொண்டாடுவார்கள். தற்போது கரோனாவால் இந்தியாவே பாதிக்கபட்டுள்ளது. பலரும் கஷ்டத்தில் இருக்கின்றனர். அதனால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தனது ரசிகர்களுக்கு மன்ற தலைவர்களின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுபோல, அன்றைக்கும் உதவுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு சார்பில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக டீஸர் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

actor vijay master
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe