Advertisment

அம்பேத்கர் பிறந்தநாள் - நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள்

vijay request his fans club members to celebrate ambedkar birthday

Advertisment

நடிகர் விஜய்தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

படங்களை தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார் விஜய். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக நின்று 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், நாளை (14.04.2023) டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.

Advertisment

அதோடு புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்ட வாரியாக இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட வருடங்களாக விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேச்சுகள் அடிபட்டு வருகிறது. இந்த சூழலில் விஜய்யின் இந்த முயற்சிகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

actor vijay ambedkar
இதையும் படியுங்கள்
Subscribe