vijay reply to sharukhan post

Advertisment

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' படம் கடந்த 7 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து திரையரங்குகளில் ஆட்டம் ஆடி மகிழ்கின்றனர். இருப்பினும் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைத்து வருகிறது. இதுவரை உலக அளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு அண்மையில் தெரிவித்தது.

இதையடுத்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் விஜய் ரசிகர்கள் சார்பாக ஷாருக்கானுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது ரசிகர்களுடன் உரையாடி வந்த ஷாருக்கான் விஜய் ரசிகரின் வாழ்த்திற்கு, "உங்கள் வாழ்த்துக்கு நன்றி. தளபதியின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறோம். லவ் யூ விஜய் சார்" எனப் பதிலளித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் ஷாருக்கானின் இந்த பதிவிற்கு தற்போது விஜய் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜவான் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதற்காக ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள். லவ் யூ டூ ஷாருக்கான் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.