Advertisment

பதானை எதிர்க்கும் பாஜக; விஜய்யை களமிறக்கிய படக்குழு

Vijay Released Pathaan Trailer

Advertisment

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' அண்மையில் வெளியானது.கவர்ச்சியாக உடை அணிந்து தீபிகா படுகோனே நடனமாடியிருக்கும் இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக-வை சார்ந்த நரோட்டம் மிஸ்ரா, பதான் படத்தின் பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகளை மாற்றுமாறு பதான் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார். அடுத்துஅயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, ஷாருக்கானை நான் நேரில் பார்த்தால் உயிரோடு அவரை எரித்து விடுவேன்; இல்லை வேறு யாராவது எரித்தால் அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் வரை சென்று ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறினார்."ஷாருக்கானை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்" என்று பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் எச்சரித்தார்.

இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று பதான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் “வாழ்த்துகள் ஷாருக்கான் மற்றும் பதான் குழுவினருக்கு.இதோ ட்ரைலர்” என லிங்க்கை இணைத்து ஹேஷ்டேக் உடன் வெளியிட்டுள்ளார். இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பிறகும் விஜய் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளது பாஜக தரப்பிலும் விஜய் ரசிகர்கள் தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் முதன் முறையாக மற்றொரு நடிகரின்ட்ரைலர் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor vijay sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe