Vijay is ready to start Free Legal Advice Center

Advertisment

விஜய்யின் மக்கள் இயக்கம்சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடைபெற்றது.

இதையடுத்து மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த பனையூரில், விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பெண் நிர்வாகிகளுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார்.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த முன்னெடுப்பாக இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் வருகிற 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு சட்டமன்றத்தொகுதிகளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 'தளபதி விஜய் பயிலகம்' என்ற இரவு பாடசாலை திட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.