/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/61_26.jpg)
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். நடிகர் விஜய்யின் 65வது படமான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, விஜய் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவிவந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்படவுள்ள இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் இயக்குநர் வம்சி கவனம் செலுத்திவரும் நிலையில், இப்படத்திற்கான விஜய் சம்பளம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கான சம்பளமாக நடிகர் விஜய் ரூ. 120 கோடி கேட்டதாகவும், தயாரிப்பு தரப்பும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 'தளபதி 66' படத்தின் மூலம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் இணையவுள்ளார். தமிழ் சினிமாவிலிருந்து நடிகர் ரஜினிகாந்திற்கு பிறகு இப்பட்டியலில் இரண்டாவதாக நடிகர் விஜய் இணைவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)