sivakarti

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கடந்த வருடம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்தது. இதனை அடுத்து விஜயை வைத்து சர்கார் படமும், ரஜினியை வைத்து பேட்ட படத்தையும் எடுத்து வெளியிட்டது. இரண்டு படங்களுமே நல்ல வசூலை வாரிக்குவிக்க, இந்த நிறுவனம் வேறு யாருடன் படம் பண்ணுவார்கள் என்று எதிர்ப்பார்க்கையில், தற்போது சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணுகிறார்கள்.

சீமராஜா படத்தை தொடர்ந்து சயின்ஸ் பிக்‌ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார் சிவா, இன்னும் அந்த படத்திற்கு பெயர் வைக்காததால் எஸ்.கே 14 என்று சொல்லப்படுகிறது நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இதனை இயக்குகிறார். இதை அடுத்து எஸ்.கே15 படத்தை பி.எஸ் மித்ரன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிவாவின் 16 வது படத்தை பாண்டிராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் குறித்த வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.