Advertisment

சிவகார்த்திகேயன் பட வில்லன் கைது!

vijay raaz

சிவகார்த்திகேயன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படம் காக்கிச்சட்டை. இந்த படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய் ராஸ்.

Advertisment

இவர் பாலிவுட்டில் ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 57 வயதான இவர், க்யா தில்லி க்யா லாகூர் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.

நடிகர் விஜய் ராஸ், தற்போது வித்யா பாலன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பிலேயே ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் மஹாராஷ்ட்ரா போலீஸார் விஜய் ராஸை கைது செய்தனர். பின்னர், விஜய் ராஸ் ராம்நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

vijay raaz
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe