style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் "யஷ்" நடிப்பில் உருவான "கே.ஜி.எஃப்" திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று வசூலில் சாதனைப்படைத்தது. மிகுந்த பொருட்செலவில் உருவான இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்தது. "கே.ஜி.எஃப்" நல்ல விமர்சனங்களை பெற்றிருந்ததை அறிந்த "தளபதி" விஜய் இப்படத்தை காண விரும்பினார். அவருக்காக சென்னையில் ப்ரத்யேகமாக இப்படத்தை படக்குழுவினர் திரையிட்டனர். படத்தை பார்த்த நடிகர் விஜய், "கே.ஜி.எஃப்" படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளதாக பாராட்டினார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். "தளபதி" விஜய்யின் பாராட்டை பெற்ற "கே.ஜி.எஃப்" படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சியில் உள்ளனர்.