இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான'அரபிக் குத்து...' பாடலை படக்குழு வெளியிட்டது.சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிதாகாந்தி இருவரும் பாடிய இப்பாடல் வெளியாகிரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில் விருதுவழங்கும்விழா ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டார். அப்போது அவரிடம் அரபிக்குத்து பாடலை கேட்டு விஜய் என்ன சொன்னார் எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "இந்த பாடலை முன்பே படமாக்கிவிட்டார்கள். அதனால் விஜய் சாரின் கருத்தை என்னால் அறிய முடியவில்லை. சமீபத்தில் ப்ரோமோ வீடியோ எடுக்கும் போது தான் தொலைபேசியில் பேசிய விஜய் சார்," சூப்பர் பா, ரொம்ப நன்றி பா பாட்டு எழுதி கொடுத்ததற்கு. அரபி எல்லாம் பயங்கரமாஎழுத்துறியே" என பாராட்டியாக தெரிவித்தார்.