vijay prabakar album

நேரடி பொழுதுபோக்கு, திரைப்பட தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு துறையில் புகழ் பெற்று விளங்கும் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP)நிறுவனம் தற்போது டராக்டிகல் கான்சர்ட்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்டில் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான ‘50 சென்ட்’ கலந்து கொள்கிறார். இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Advertisment

இவரது உலகளாவிய இசைக்கச்சேரி 'தி ஃபைனல் லேப் டூர் 2023' (The Final Lap Tour 2023)இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது. இதை விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் ஆகிய இரு பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைக்கின்றன. 50 சென்ட்டின் வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் உள்ளிட்டவற்றைவெளிப்படுத்தும் வகையில் இந்த கான்சர்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களும் கலந்து கொண்டு பாட உள்ளனர்.

Advertisment

இந்நிகழ்ச்சி குறித்து விஜய பிரபாகரன் கூறும்போது, திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை கேப்டன் விஜயகாந்துக்குஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன்னெடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும் மற்றும் கலைத்துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாகவும்இருக்கும் என்று கூறினார்.