/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/229_4.jpg)
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தொடக்கத்தில் தன் படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வந்த இவர். தற்போது பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர், ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோயிலுக்குள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சிறப்பு தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "எங்கேயோ பிளாட்பாரத்தில் கிடந்த நான்இன்றைக்கு இப்படி இருக்கிறேன் என்று சொன்னால் அது கடவுளின் ஆசி தான். உழைக்கிற எல்லா மக்களும் உயருவதில்லை. அவற்றில் சிலரைத்தான் கடவுள் உயர்த்துகிறார். என் மகனும் வெற்றிகரமாக இன்று இருப்பது கடவுளுடைய ஆசியும் என் மகனின் உழைப்பும் தான். நாம் எந்த அளவிற்கு உயர்த்துகிறோமோ அந்த அளவுக்கு கடவுள் உயர்த்திக்கொண்டு போவார்" என்றார்.
அப்போது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "கோவிலுக்குள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டீர்கள்... பதில் சொன்னேன். கோவிலுக்குள் என்ன கேட்கணுமோ அதை மட்டும் கேளுங்கள்" என்று கோபத்துடன் பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)