தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது திறமையானநடிப்பால் ஏராளமான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்விஜய் மக்கள் இயக்கத்தை சேர்த்தபலரும் போட்டியிட்டனர். இதில் சிலர் வெற்றியையும் பெற்றனர். நடிகர் விஜய் வருங்காலங்களில்அரசியலில் களமிறங்குவார் எனப் பலரும் கூறிவருகின்றனர். அதற்கான ஒத்திகையாகத்தான்விஜய்தன்னுடையமக்கள் இயக்கத்தினரைதேர்தலில் போட்டியிட வைத்ததாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
இதனிடையே அவ்வப்போது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில்தற்போது மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த போஸ்ட்டரில்முடிவு எடுத்தல் முதல்வர்தான், 2021-ல் முதல்வர் மு.க ஸ்டாலின் (தளபதி) என்றும், 2026 ல் முதல்வர் விஜய் (தளபதி) என்றும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் 2026 ல் விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர்பிரசாந்த் கிஷோர் என்று அவரது புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்புகளைகிளப்பியுள்ளது.