தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் விஜய். இவர்,அரசியல் கட்சி தொடங்கப்போவதாகச்செய்திகள் வெளிவந்தன. 'அகில இந்தியதளபதி விஜய்மக்கள் இயக்கம்' என்ற பெயரில்அரசியல் கட்சியாகப் பதிவு செய்யக் கோரியவிண்ணப்பமும் வெளியானது. ஆனால், இந்தத் தகவல் வெளியானசிறிதுநேரத்திலேயே,விஜய்யின்செய்தித் தொடர்பாளர், இந்தச்செய்தியைமறுத்தார்.
இந்தநிலையில், விஜய்யின்தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், "விஜய்யின்பெயரில் அரசியல் கட்சிதொடங்குவதுதன்னுடையமுயற்சி எனவும், இதற்கும் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றும் கூறியுள்ளர். மேலும், "விஜய்தனதுஇயக்கத்தில் இணைவாராஎன்பதுஎதிர்காலத்தில் தான் தெரியும்எனவும்கூறியுள்ளார். இது விஜய்ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்பெயரில் தொடங்கப்படும் இயக்கத்திற்கும், விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது விஜய்யின்ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில்விஜய்,இந்தக் குழப்பத்திற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளார்.
விஜய்அந்த அறிக்கையில், "தனக்கும், தன் தந்தை ஆரம்பித்த இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும்இல்லை" என்று கூறியுள்ளார். மேலும், விஜய்அந்த அறிக்கையில்,"எனதுரசிகர்கள், எனதுதந்தைகட்சிஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களைஅக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ, கட்சிப் பணியாற்றவோ வேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "எனதுபெயரையோ, புகைப்படத்தையோ எனதுஅகில இந்தியதளபதி மக்கள் இயக்கத்தின் பெயரையோதொடர்புபடுத்திஏதேனும்விவகாரங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும்விஜய் தனதுஅறிக்கையில் எச்சரித்துள்ளார்.