/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/286_14.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் 7 நாளில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
இந்த வெற்றியைக் கொண்டாட படக்குழு சார்பாக பிரம்மாண்ட வெற்றிவிழா நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் விஜய் இதில் கலந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இதே அரங்கில் நடத்த திட்டமிட்டிருந்தனர். பின்பு ரத்து செய்யப்பட்டது. ஒவ்வொரு படத்தின் ஆடியோ விழாவிலும் குட்டி ஸ்டோரி சொல்லி அவரது ரசிகர்களை மகிழ்விப்பார் விஜய். ஆனால் லியோ படத்திற்கு அது நடக்காமல் போனதால் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் வெற்றி விழாவில் விஜய் கலந்துகொள்வதாகக் கூறப்படும் சூழலில், குட்டி ஸ்டோரி கண்டிப்பாக இருக்கும் என்பதுரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)