dgbdbdbg

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக 'கோலமாவு கோகிலா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது. அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது.

Advertisment

இந்த நிலையில், 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில், கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஜூலை 1ஆம் தேதி அன்று மீண்டும் தொடங்கியது. சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் - பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பாடலின் நடன இயக்குனர் ஜானியின் பிறந்தநாள் இந்த செட்டில் கொண்டாடப்பட்டுள்ளது. ஜானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தாடியுடன் இருக்கும் விஜய்யின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment