/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DypuqRnWsAIhOAD.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 'பிரமாண்ட அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படம் குறித்த பொய் தகவல்களை ரசிகர்கள் பரப்பி வருவதால் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளனர். அதில்...."ரசிகர்களுக்குப் பெரிய வேண்டுகோள். 'தளபதி 63' தொடர்பாக எந்தவொரு தகவலையும் பகிர வேண்டாம். உங்களை மகிழ்விக்க படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் தற்போது கசிந்துள்ளது. படத்தில் விஜய்க்கு 'மைக்கேல்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)