vijay movie varisu second single update released

Advertisment

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கமுக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், "நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியதை நினைவுகூர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதனால் 'வாரிசு' படம் தெலுங்கில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகாத சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் 'வாரிசு' படம் தெலுங்கில் அதிகமான திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என விஜய்க்கு ஆதரவாகப்பேசியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், "படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. சொன்னபடி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்" எனத் தெரிவித்திருந்தது. அதனை 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவும் உறுதி செய்திருந்தார்.

Advertisment

இதனிடையே 'வாரிசு' படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஜய் திரைத்துறைக்கு வந்து 30ஆண்டுகள் ஆகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் 'வாரிசு' படக்குழு தற்போது இப்படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 4ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் 'தீ' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செஸ் விளையாட்டில் வரும் ராஜா காய்னில்தீ பற்றியெரிவது போல் இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது. அதனால் செகண்ட் பாடல், 'ராஜா தீ ராஜா' என்று ஆரம்பிக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.