தளபதி விஜய் என்று ரசிகர்களால் அழைப்படும் நடிகர் விஜயின் பிறந்தநாள் வருகிற 22ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதன்காரணமாக அன்றைய தினத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை தியேட்டர்களில் சிறப்பு காட்சி போடுவார்கள்.

Advertisment

vijay

சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரின் மேலான்மை இயக்குநர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூன் 22ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு விஜய்யின் போக்கிரி படத்தை திரையிடுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்த மற்றொரு பதிவில் இந்த சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக புக் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

அதேபோல சென்னையிலுள்ள ரோஹினி சினிமாஸ் விஜய்யின் கத்தி படத்தை போட இருப்பதாக தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகிபாபு என ஒரு நட்சித்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துவருகின்றனர். இந்த வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment