Advertisment

கோடிக்கணக்கில் மோசடி...விஜய் பட ஹீரோயினுக்கு பிடிவாரண்ட்...  

விஜய் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான படம் புதிய கீதை. இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் மற்றும் அமீஷா பட்டேல் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தனர். அமீஷா பட்டேல் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். அமீஷா, குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருக்கிறார். மேலும் இவர்கள் தயாரிக்கும் படம் 2018ஆம் ஆண்டில் திரைக்கு வந்துவிடும் அப்போது பணத்தை திருப்பி தந்துவிடுகிறேன் என்று அமீஷா கூறியுள்ளார். ஆனால், இவர்கள் திட்டமிட்டபடி படம் திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். வாங்கிய கடன் பணத்துடன் வட்டியையும் சேர்த்து ரூ.3கோடிக்கு அமீஷா பட்டேல் செக் கொடுத்துள்ளார்.

Advertisment

ameesha patel

அமீஷா கொடுத்த செக்கை அஜய் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியான அஜய், நீதிமன்றத்தை நாடினார். அமீஷா பட்டேல் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமீஷா பட்டேலுக்கு பல தடவை சம்ம அனுப்பியுள்ளது. ஆனால், அமீஷா நீதிமன்றத்தில் ஒருமுறைக்கூட ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

அவரை கைது செய்து விசாரிப்பதற்காகபோலீசார் விரைந்துள்ளனர். ஏற்கனவே 2016ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆட ரூ.11 லட்சம் வாங்கி கொண்டு கடைசி நேரத்தில் நடனம் ஆட மறுத்து விட்டதாக அமீஷா பட்டேல் மீது மும்பை போலீசில் புகார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ameesha patel actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe