Advertisment

விஜய் பட இயக்குநர் மருத்துவமனையில் கவலைக்கிடம்

vijay movie director Siddique in hospital

Advertisment

மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் சித்திக். தமிழில் விஜய்யின் 'ப்ரண்ட்ஸ்', விஜயகாந்தின் 'எங்கள் அண்ணா', பிரசன்னாவின் 'சாது மிரண்டா' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். பின்பு மீண்டும் விஜய்யை வைத்து 'காவலன்' மற்றும் கடைசியாக தமிழில் அரவிந்த் சாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல் கல்லீரல் பிரச்சனைகாரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதால் எக்மோ(ECMO) கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்உடல்நலம் பெற்று வர அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். விரைவில் அவரது உடல்நலம் குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவமனை அறிக்கை வெளியிடவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

actor vijay director
இதையும் படியுங்கள்
Subscribe