Skip to main content

மாஸ் கெட்டப் - விஜய் மில்டன் இயக்கத்தில் ஷாம்

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

vijay miton new movie with shaam

 

தமிழில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், பரத் நடிப்பில் வெளியான 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கடுகு', 'கோலி சோடா 2' உள்ளிட்ட படங்களை இயக்கினார். 

 

இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மல் குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

 

இந்த நிலையில், விஜய் மில்டன் இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஷாம் ஹீரோவாக நடிப்பதாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஷாம் மாஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

12பி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான ஷாம் லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்திருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷாலினியுடன் கலந்துகொண்ட ரிசப்சன்; அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

Ajith Gift to shyam reception

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக ஷாம் அவர்களைச் சந்தித்தோம். பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அஜித் உடனான நட்பு பற்றியும் அவரது திருமண விழாவில் அஜித் கலந்துகொண்டது பற்றியும் நாம் கேட்ட போது அவர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு...

 

நான் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான படம் 12பி. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அஜித் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதற்கு நன்றி சொல்லலாம் என்று அவரை தொடர்பு கொண்டு பேசி நேரில் சந்திக்க ஏவிஎம் ஸ்டூடியோ போனேன். ஹே, ஷாம்.. குட்.. நல்லா நடிச்சிருந்த. முதல் படம் மாதிரியே தெரியல. ஒரு பத்து படம் நடிச்சிருந்த மாதிரி சூப்பரா நடிச்சிருந்த என்றார். அந்த சமயத்தில் அந்தப் பாராட்டு எனக்கு மிகப்பெரியதாய் இருந்தது.

 

கல்யாணப் பத்திரிக்கை கொண்டு போய்க் கொடுத்தேன். என்ன அதுக்குள்ள? என்றார். ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வருவதைச் சொல்லியதும் வாழ்த்துச் சொன்னவர் வரவேற்புக்கு வந்து வாழ்த்தினார். அப்போது எனக்கு ஒரு புதிய போன் அன்பளிப்பா கொடுத்தார். இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.

 

 

Next Story

“நீ என்னடா பண்ணுற என் பக்கத்துல” - ஷாமை கலாய்த்த விஜய்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

Vijay teasing Shyam memories

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக ஷாம் அவர்களைச் சந்தித்தோம். பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் விஜய்யுடன் முதன்முதலில் நடித்தது பற்றியும், நடிகர் சங்கக் குழுப் புகைப்படம் பற்றி பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு...

 

மலேசியாவிலிருந்து நடிகர் சங்கக் கலைநிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் போய்க்கொண்டிருந்தோம். அப்போது பிளைட் ஏறும் முன் பஸ்ஸில் பார்த்த போது ஹாய் விஜய் அண்ணா என்றதும், ஹாய் என்று சாதாரணமாக இருந்துவிட்டார். அவரிடம் அவ்வளவு தான் ரியாக்சனே வரும். அதற்கப்புறம் இந்தக் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அவர் பக்கத்தில் போய் நின்று இந்த போட்டோவைக் காட்டினேன். பயங்கரமான மெமரீஸ்ல என்றவர், அருகில் நிற்கும் என்னைப் பார்த்து, நீ என்னடா பண்ணுற, என் பக்கத்துல என்று கலாய்த்தபடியே கேட்டார். ஆமாம் நான் உங்க பக்கத்துல தான் நின்றேன் என்றதும் வியந்தார்.

 

குஷி படத்தில் விஜய் நண்பர்களாக நடிக்க பலர் கூடி நின்றபோதும் அருகே நான் நின்று நடிக்கும் வாய்ப்பு மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவால் கிடைத்தது. அதன் பிறகு 12பி படத்தில் எங்கே வாய்ப்பு கேட்டு நின்றேனோ அதே இடத்தில் ஹீரோவாக முதல் ஷாட் எனக்கு வைத்தார்கள். அப்போதெல்லாம் விஜய் அண்ணாவை பெயரைச் சொல்லித்தான் கூப்டுவேன். என்ன விஜய் நீங்கதான் அடுத்த சூப்பர்ஸ்டாராமே என்றதும் கிண்டலாக புருவம் உயர்த்தி என்ன சொன்ன என்று கிண்டலாகக் கேட்டுவைப்பார்.