vijay miton new movie with shaam

Advertisment

தமிழில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், பரத் நடிப்பில் வெளியான 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கடுகு', 'கோலி சோடா 2' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதனைத்தொடர்ந்துவிஜய் ஆண்டனி,மேகாஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும்'மழை பிடிக்காத மனிதன்' படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புமுடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.இப்படம்கடந்த 2014 ஆம் ஆண்டுநிர்மல்குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வருவதுகுறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விஜய் மில்டன் இயக்கும் புதிய படம்பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஷாம் ஹீரோவாக நடிப்பதாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின்படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஷாம் மாஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

12பி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான ஷாம்லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்திருந்தார்.