
'பகல் நிலவு' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் 'மௌன ராகம்', 'நாயகன்', 'தளபதி', 'ரோஜா', 'பம்பாய்', 'அலைபாயுதே', 'ராவணன்', 'ஓ காதல் கண்மணி', 'செக்கச் சிவந்த வானம்' உட்பட பல்வேறு படங்கள் மூலம் தமிழ் சினிமாவை உலகளவில் பெருமைப்பட செய்தவர் இயக்குநர் மணிரத்னம். 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி பிறந்த மணிரத்னம், இன்றோடு 65 வயதை நிறைவு செய்வதை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர், ஒளிப்பதிவாளர் விஜய்மிமில்டன் இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்.. "இன்றும் என் கைபேசி, ஐபேட், கம்பியூட்டர் என அனைத்திலும் உங்கள் புகைப்படம்தான் ஸ்க்ரீன் சேவர். இத்தனை வருடங்களாகியும், இத்தனை படங்களாகியும் உங்கள் மீதான பிரமிப்பு குறையவே இல்லை. உங்களால் ஆன பாதிப்பு மாறவேயில்லை. இன்னும் பல வருடங்கள், பல படங்கள் நிகழ இறைவனை வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.