/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Ez85SQTVkAEAW3j.jpg)
கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது கரோனா இரண்டாம் அலை. இது கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கே.பாலச்சந்தரின் ரெட்டை சுழி, சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை' படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா, சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இவர் சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (27.04.2021) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு திரைத்துறை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "பிறந்ததின வாழ்த்து சொன்ன வாய் மூடுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. நன்றி இறைவா. மிக்க நன்றி. விரைவில் சந்திப்போம் நண்பா" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)