Published on 30/12/2020 | Edited on 30/12/2020

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதில்லையென நேற்று அறிவித்ததன் மூலம் அவரது அரசியல் பிரவேசம் குறித்து நீடித்து வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் இந்த முடிவால், ஏமாற்றமடைந்த அவரது ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் ரஜினியின் முடிவு குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் விஜய் மில்டன் இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ரஜினிகாந்த் சார் தைரியமான முடிவு. உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். உண்மையில் நீங்கள் இங்கு ஒரு மாற்றத்தை விரும்பினால் உங்கள் ஆதரவை வெளிப்படையாக மக்கள் நீதி மய்யத்திற்கு அறிவியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.