/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/321_40.jpg)
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் என பலர் நடித்து வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கிலும், ஐமேக்ஸ் திரைக்கேற்பவும் வெளியாகவுள்ளது.
இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. முன்னதாக இப்படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்தை பயன்படுத்த தன்னிடம் வெங்கட் பிரபு அனுமதி கேட்டதாக தே.மு.தி.க. பொதுச்செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் தி கோட் படத்தில் விஜயகாந்த் சில காட்சிகள் வருவதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் விஜய், பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்துத்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரேமலதா விஜயகாந்தின் இல்லத்தில் அவரரை சந்தித்த விஜய், தி கோட் படத்தில் ஏஐ மூலமாக விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு நன்றி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது விஜய்யுடன் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)