Advertisment

'அன்பென்ற ஒற்றை சொல்லை...' - தாய் தந்தையுடன் விஜய்

vijay meets his parents

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். லலித் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். அதற்காக தயாராகி வருகிறார். முதற்கட்டமாக படக்குழுவுடன் அமெரிக்காசென்ற விஜய் தனது கதாபாத்திரத்திற்காக விஎஃபக்ஸ் ஸ்கேன் டெஸ்ட் எடுக்கப்பட்டது.

Advertisment

பின்பு சென்னைக்கு சில தினங்களுக்கு முன்பு வந்தடைந்தார். இந்த மாதம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்காக வந்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் இருக்கும் விஜய் அவரது தாய் ஷோபனாவையும், தந்தை சந்திரசேகரையும் சந்தித்துள்ளார். சந்திரசேகர் அண்மையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து, அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் "உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து" என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார் சந்திரசேகர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமீபகாலமாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe