Advertisment

234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜய் ஆலோசனை

vijay meets his fans club members

Advertisment

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப்பேசப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அண்மையில் தனது 68வது படத்தை முடித்தவுடன் சினிமாவில் இருந்து 3 வருடம் விலகி வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலைக் குறி வைத்துச் செயல்படத்திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நாளை (11.07.2023) தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திக்க விஜய் திட்டமிருப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது. பனையூரில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe