Advertisment

ட்விட்டரில் சாதனை படைத்த விஜய் படங்கள்!

vijay master and beast movies most tweeted hastag of this year

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்குஜோடியாக மாளவிகா மோகன்நடிக்க, விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைதொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார்இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="13ca6f48-ef2d-4ac7-89d8-e5f945ce94ac" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_25.jpg" />

இந்நிலையில் 'மாஸ்டர்' மற்றும் பீஸ்ட் திரைப்படங்கள் ட்விட்டரில் சாதனை படைத்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் ஆண்டின்இறுதி மாதத்தில் அந்தாண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்குகள், அதிகம் பகிரப்பட்ட ட்விட்டுகள் ஆகியவற்றை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில்2021 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களுக்கான ஹேஸ்டேக்குகள் பட்டியலில் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் அஜித்தின் 'வலிமை'திரைப்படமும், மூன்றாவது இடத்தில் விஜய்யின் 'பீஸ்ட்'திரைப்படமும்இடம்பிடித்துள்ளது. அடுத்தடுத்தஇடங்களில் ஜெய் பீம் மற்றும் வக்கீல் சாப் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளது.

Advertisment

இதனைத்தொடர்ந்து இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்குகள் பட்டியலில் மாஸ்டர் திரைப்படம் 8 வது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் இடம் பிடித்த சினிமா ஹேஸ்டேக் மாஸ்டர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

actorvijay Beast master
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe