Skip to main content

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

vijay makkal mandram member arrested

 

சில தினங்களுக்கு முன்பு, திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் நடப்பதாகத் திருச்சி பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து திருச்சி பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் ஸ்பாவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

 

மேலும், அங்குள்ள வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும் இரண்டு பெண்களும் இருந்தனர். வீட்டில் உள்ள பொருட்களைச் சோதனை செய்தனர். அதில் ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஸ்பாவின் மேலாளர் லட்சுமி தேவியைக் கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர்தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து, உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்தியதாக உரிமையாளர் செந்தில் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில், விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில் குமார் தலைமறைவாக இருந்து வந்ததால், போலீசார் அவரைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவரைக் கண்டுபிடித்த காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்