vijay makkal iyakkam ribute to Pasumbon Muthuramalinga Devar statue

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. இதனிடையேடாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யத் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர், தொடர்ந்து காமராஜர், பெரியார் எனப் பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு மரியாதை செய்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செய்தனர். இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கதினர் திரளாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Advertisment