கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்பாசமுத்திரம் பகுதியில் CIFS வீரர்களுக்கானதுப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது சிறுவன் புகழேந்தியின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நடிகர் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் நாளை(13.4.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.